
அத்துமீறிய மீன்பிடிக் குற்றச்சாட்டுக்காக 11 இலங்கை மீனவர்கள், இந்தியக் கடற்படையால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலையில் இருந்து மீன்பிடிப்பதற்காக இரண்டு படகுகளில் சென்ற 11 மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளர். அவர்கள் ஆந்திர மாநிலம் – காக்கிநாடா முறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மீனவர்களிடம் இருந்து 200 கிலோ மீன்களும் அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





