பாம்புகளைப் பிடித்து காட்டுக்குள் பத்திரமாக விடுகின்ற பலப்பிட்டியைச் சேர்ந்த W.A.ஜாக்சன் பிடிபட்ட மலைப்பாம்பின் உடலில் உள்ள நீர்க்கட்டியை அகற்றி பத்திரமாக மீண்டும் காட்டுக்குள் விட்டுள்ளார்.
ஆயிரக்கணக்கான நாகப்பாம்புகளைப் பிடித்து காட்டுக்குள் விட்ட ஜாக்சன், முதன்முதலில் உடலில் கட்டியுடன் தவித்து வந்த மலைப்பாம்பு ஒன்றை அண்மையில் பிடித்து அதற்கு சிகிச்சை வழங்கியுள்ளார்.

குறித்த மலைப்பாம்பின் உடலின் உள்ள கட்டிக்கு சிகிச்சை அளிக்காவிட்டால், இன்னும் சில நாட்களில் அது இறந்து விடும் எனவே எல்பிட்டிய, தல்கஸ்பேயில் உள்ள வீட்டிற்கு எடுத்துச் சென்று சிகிச்சை வழங்கி காட்டுக்குள் விடுவிக்க ஏற்பாடு செய்தார்.
உயிரினங்கள் மீது அதிக அன்பும் அவற்றுக்கான மருத்துவ அறிவும் இருப்பதால் நான் பெருமைப்படுகின்றேன்.
அதனால்தான் இந்த பாம்பை அகால மரணத்தில் இருந்து தன்னால் காப்பாற்ற முடிந்ததாக ஜாக்சன் கூறியுள்ளார்.






