
தேசிய பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இந்த சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறவிடக்கூடாது என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தேசிய பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதற்கமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாதோடு வேற்றுமைகளை மறந்து தமிழ்க் கட்சிகள் ஒன்றாக வந்து ஜனாதிபதியுடன் பேச வேண்டும் எனவும் அவர் கூறினார்.
மேலும் நாம் அன்றும் சரி, இன்றும் சரி தேசிய பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் ஒரே நிலைப்பாட்டில் இருக்கின்றோம்.
இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.





