
3 பவுன் தங்கச் சங்கிலி ஒரு அலைபேசி மற்றும் ,20 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றை திருடிய குற்றச்சாட்டில் வவுனியாவைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் 25ஆம் திகதி இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றது. இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வவுனியாவைச் சேர்ந்தவர் என்றும் கோப்பாயில் தங்கியிருந்து வேலை செய்து வருவதாகவும் தெரியவருகிறது.




