இளைஞர்களை கைது செய்வதற்கு அதிக நிதி ஒதுக்கிய ரணில் – சபையில் கிழி கிழி

இன்றைய சபை அமர்வில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா :

ஜனாதிபதி ரணில் விகாரமசிங்கவால் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று சபையில் சமர்பிக்கப்பட்டது.அதில் மக்களுக்கான எதுவுமே சொல்லப்படவில்லை.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு என்ன வழி என்று ஜனாதிபதி கூறவில்லை.மாறாக அரசுக்கு எதிராகப்  போராடும் இளைஞர்களை,மக்களை கைது செய்வதற்காக பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இது எதற்காக.

மக்களை அடக்கி ஒடுக்குவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.கோட்டா பாய என்ற ஜனாதிபதி நாட்டில் பலவற்றை அதிகரித்துச் சென்றார்.அதில் ஒன்று  தான் வறுமை.மூன்று மடங்காக வறுமையை அதிகரித்து விட்டு அவர் சென்று விட்டார்.

இப்போது  உள்ளவர் பொலிஸாருக்கும் ,இராணுவத்தினருக்கும்,அதிரடிப் படையினருக்கும் அதிக நிதியை அள்ளி இறைத்துள்ளார் ரணில் என்றார்.
 
 

Leave a Reply