தமிழ் மக்களின் காணிகள் படையினருக்கு அன்பளிப்பு – யாழில் ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம் (படங்கள் இணைப்பு)

 முப்படைகளுக்கு  தேவையான காணிகளை,வடக்கில் இருந்து  தாரை வார்ப்பது தொடர்பான கலந்துரையாடல் , யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுனர் அலுவலகத்தில் இன்று மதியம் நடைபெறவுள்ளது.

 இதற்கு வடக்கில் உள்ள அனைத்துப் பிரதேச செயலர்கள் மற்றும்,தொடர்புடைய அதிகாரிகள் ஆளுநர் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.அத்துடன் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எவரும் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்படவில்லை.

அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் ,முன்னர் ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் காணிகள் இன்று வரை முழுமையாக விடுக்கப்படாத நிலையில்,மேலும் காணிகளை கையகப்படுத்தும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள்,ஆளுநர் அலுவலகம் முன்பாக தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“இனப்படுகொலை இராணுவமே வெளியேறு”,”எமது நிலம் எமக்கு வேண்டும்” போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கியவாறும்,கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply