ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் மீது வாள்வெட்டு – சிறுவன் பலி

மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரணபிமகம பகுதியிலுள்ள வீடொன்றில் சிறுவன் ஒருவன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (14) காலை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் மற்றும் இரு மகன்களை அருகில் உள்ள வீட்டில் இருந்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த மூன்றரை வயது சிறுவன் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

38 வயதான தாய், 19 வயது மகள் மற்றும் 15 வயது சிறுவன் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சில காலமாக நிலவி வந்த தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply