
முப்படைகளுக்குத் தேவையான காணிகளை,வடக்கில் இருந்து தாரை வார்ப்பது தொடர்பான கலந்துரையாடல் , யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுனர் அலுவலகத்தில் இன்று மதியம் நடைபெறவுள்ளது.
இது குறித்து பிரதேச செயலர்களுக்கு மாவட்டச் செயலகம் ஊடாக ஏற்கனவே கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
குறித்த கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
யாழ் மாவட்டத்தில் உள்ள அரச காணிகள் மற்றும் காணி சுவீகரிப்பு தொடர்பான விடயங்களில்,தீர்வு காணப்பட வேண்டியவை தொடர்பில்,கலந்துரையாடப்படவுள்ளதாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மக்களின் காணிகளை இனியும் படையினர் அபகரிக்க கூடாது என்று தெரிவித்து,யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக மக்கள் இன்று மதியம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்துக்கு ,அதிகாரிகள் உள்ளே சென்று கலந்து கொள்ள முடியாத வண்ணம்,மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்து,ஆளுநர் அலுவலக பிரதான வாயிலில் நின்று அதிகாரிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர்.





