யாழில் பெண்களை இழுத்து வீழ்த்திய பொலிஸார் – ஆடைகளைக் கிழித்ததால் குழப்பம் (படங்கள் இணைப்பு)

வடக்கில் காணப்படும் காணி தொடர்பான பிரச்சினைகள்,சுவீகரிப்புகள்,மற்றும் அரச திணைக்களங்களுக்கு சொந்தமான காணிகள் தொடர்பில் ஆராய்தல் போன்றவற்றுக்காக ,ஆளுநர் அலுவலகத்தில் தற்போது கூட்டம் ஒன்று ஆரம்பமாகியுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜ தலைமையில் ,ஆளுநர் அலுவலகத்தில் ,முப்படைகளுடன் இந்தக் கூட்டம் தற்போது நடைபெறுகிறது.

மக்களின் காணிகளை அபகரித்து ,படையினருக்கு வழங்குவதாக தெரிவித்து,இன்றைய தினம்  மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.கூட்டத்துக்கு வருகை தந்த முப்படைகளை உள்ளே நுழைய விடாமல் மக்கள் தடுத்தனர்.இதன் பொது பொலிஸார் போராட்டக் காரர்களுடன் இழுபறிப்பட்டனர்.இதன் போது பெண் ஒருவரின் ஆடை கிழிந்தமையால் குறித்த இடத்தில் குழப்பம் ஏற்பட்டது.

Leave a Reply