ரயிலுடன் மோதிய கனரக வாகனம்: புத்தளத்தில் சம்பவம்!(படங்கள் இணைப்பு)

இன்றையதினம் காலை 9.30 மணியளவில் நீர்கொழும்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பயணிகள் புகையிரதம் குரான புகையிரத நிலையத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

கவனக்குறைவாக இயக்கப்பட்ட கண்டெய்னர் பார ஊர்தி ரயிலின் மீது மோதியதே இதற்குக் காரணம்.

இந்த விபத்தில் ரயிலின் என்ஜின் சிறிது சேதமடைந்ததுடன், ரயிலுடன் மோதியதில் கண்டெய்னர் பார ஊர்தி புகையிரதப்பாதையை விட்டு எறியப்பட்ட நிலையில், இந்த விபத்து காரணமாக புத்தளம் புகையிரத பாதையில் பயணிக்கும் புகையிரத சேவைகள் அணைத்தும் தடைப்பட்டுள்ளதாகவும், புகையிரதங்கள் தாமதமாக இயக்கப்படும் எனவும் புகையிரத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply