மாந்தை கிழக்கு விவசாயிகள் மகிழ்ச்சியில் (படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவு மாவட்டத்தின்   மாந்தை கிழக்கு கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட  சிறாட்டிகுளம்  மற்றும் நட்டாங்கண்டல்  பகுதிகளில் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கான திண்ம மற்றும் திரவ  சேதன உரம் வழங்கும் நிகழ்வு   மாந்தை கிழக்கு கமநல  சேவை நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டது.

அந்த வகையிலே மாந்தை கிழக்கு கமநல சேவை நிலையத்திற்கு உட்பட்ட  சிறாட்டிகுளம்   பகுதியில் செய்கை பண்ணப்பட்ட 377 ஏக்கர் வயல் நிலங்களுக்கும்  நட்டாங்கண்டல் பகுதியில் செய்கை பண்ணப்பட்ட 311.25ஏக்கர்  நிலங்களுக்குமான பசளை விநியோகமே இன்றைய தினம்  வழங்கப்பட்டது

ஏக்கருக்கு  80 கிலோ கிராம்  சேதன பசளையும் யூரியா 21கிலோ கிராமும்  வழங்கப்பட்டன

இதே வேளை திரவ உரமான  எக்கோபிற்றா ஏக்கருக்கு 3லீற்றரும் வழங்கப்பட்டன

மாந்தை கிழக்கு கமநல சேவையின்  அபிவிருத்தி உத்தியோகத்தர் தனபாலசிங்கம் குணாளன் தலைமையில் கமநல சேவை நிலைய ஊழியர்கள்  விவசாயிகளுக்கான  பசளை விநியோகத்தில் ஈடுபட்டனர்

Leave a Reply