யாழில் சோகம்: பிறந்து 42 நாட்களேயான குழந்தைக்கு ஏற்பட்ட நிலை!

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி 2 ம் வட்டாரத்தை சேர்ந்த பிறந்து 42 நாட்களேயான ராயதீபன் டேனுயன் என்கிற  குழந்தை மரணமடைந்துள்ளது.

நேற்றிரவு பால் குடித்துவிட்டு தூங்கிய குழந்தையை இன்று அதிகாலை பெற்றோர் பார்த்தபொழுது குழந்தையின் வாயால் மூக்கால் இரத்தம் வந்துள்ளது.

உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற சமயம் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மரண விசாரணைகளை யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் மரணவிசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டார்.

Leave a Reply