சிறையில் இருந்தே தாயாருக்கு 15 பவுன் தங்க சங்கிலி அனுப்பிய பாதள உலக தலைவன்

சக்திவாய்ந்த பாதாள உலகக் குற்றவாளியாக கருதப்படும் பொடி லேசி அவரது தாயாரின் பிறந்த நாளையும் கொண்டாடும் வகையிலும் தனக்கான பிணை கிடைக்கப்போகும் சந்தோசத்தையும் இணைத்து கொண்டாடும் வகையில்  அம்பலாங்கொடையின்  ஹோட்டல் ஒன்றில் பாதாள உலக முக்கியஸ்தர்களோடு  பிரமாண்ட விருந்து நடத்தப்பட்டதாக புலனாய்வுப் பிரிவு தகவல் வழங்கியுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற இந்த விருந்துக்கு  25 இலட்சம் ரூபா செலவிடப்பட்டதாக புலனாய்வுப் பிரிவும் தகவல் வழங்கியள்ளது.

பொடி லேசி என்ற பாதாள உலக குற்றவாளி பூஸா உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிணை வழங்கப்பட்டாலும்இ பிணை நிபந்தனைகளை நிறைவேற்றி இன்னும் சிறையில் இருந்து வெளியே வரவில்லை.
விருந்து தினத்தன்றுஇ சிறையில் இருந்து பொடி லேசி வெளியிட்ட செய்தி வாசிக்கப்பட்டதாக புலனாய்வு அமைப்புகள் கூறுகின்றன. உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின்படிஇ பொடி லேசியின் தாயாருக்கு பிறந்தநாள் பரிசாக 15 பவுன் தங்க நகையும் வழங்கப்பட்டுள்ளது .

Leave a Reply