
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ச்சியாக பல நோயகள் மாறி மாறி ஏற்படும் சந்தர்ப்பம் அதிகம் என்பதால் அவர்கள் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என பொது வைத்திய நிபுணர் ,மருத்துவர் ரி.பேரானந்தராஜா தெரிவித்தார்.
யாழ் கல்வியல் கல்லூரியில் இன்று இடம்பெற்ற நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்,அதிலும் வயது கூடியவர்கள்,தமது சிறுநீரில் மைக்குரோ அல்புமின் இருப்பு தொடர்பில் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
அதே போன்று நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும்.அதிலும் அருகில் ஒருவர் புகைப்பிடித்தாலும் அவர்களுக்கு அதுவும் ஆபத்தை ஏற்படுத்தும்.அத்துடன் இவர்கள் தமது கண்களையும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
அதே போன்று கால் கைகளில் எரிவு,மற்றும் ஊசியால் குற்றுவது போன்ற வலி,விறைப்பு போன்றவை ஏற்படும் போது இவைற்றையும் மருத்துவரிடம் தெரிவித்து சிகிச்சைகளை பெற வேண்டும்.ஏனென்றால் உடலில் புண் ஏற்பட்டால் இறப்பு வீதம் அதிகமாகும்.
இது தவிர கொஞ்சமா மது குடிக்கலாம் என்று பலர் நம்பி நம்பி மது அருந்துகின்றனர்.இது எல்லாம் பொய் கதைகள்.நீரிழிவு நோய் உள்ளவர்கள் அறவே குடிக்கவே கூடாது.அவ்வாறு குடித்தால் நுரையீரல் மின்னல் வேகத்தில் பழுதடைந்து இறப்பு ஏற்படும்.
ஆகவே இவ்வாறான நோயகளிலிருந்து விடுபட சிறந்த உணவுப் பழக்கவழக்கம்,சிரித்து மகிழ்தல்,மன மகிழ்ச்சி,திருப்தி,போதிய தூக்கம் ,7 மணித்தியால தூக்கம் ஆகியவை முக்கியம் என்றார்.





