மட்டக்களப்பு கிரான் மாவீரர் துயிலுமில்லத்தில் விஷமிகள் அடாவடி (படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் காட்சிப்படுத்தப்பட்ட மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் பதாதை இன்று காலை இனம் தெரியாத நபர்களினால் அகற்றப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் பதாதைகள் கிரான் பிரதான வீதியின் சுற்றுவளைவு மையப் பகுதியில் இன்று காலை இரண்டு பக்கங்களிலும்  காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவுகள்,பொதுமக்கள், மற்றும் ஏற்பாட்டுக் குழவினர் சென்று பற்றைகள் படர்ந்து காணப்பட்ட குறித்த இடத்தில்  சிரமதானப்  பணியினை மேற்கொண்டனர்.அத்துடன்  நினைவுப் பதாதையும் காட்சிப்படுத்தினர்.குறித்த பதாகைகள் விஷமிகளால் அகற்றப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டிற்கு பின்னர் 3 வருடங்கள் கடந்த நிலையில் மாவட்டத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடுகள் தரவை,மற்றும் வாகரை  போன்ற இடங்களில் முன்னெடுக்கப்பட்டு  வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply