மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்தில் மரம் நடுகை விழா முன்னெடுப்பு!

<!–

மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்தில் மரம் நடுகை விழா முன்னெடுப்பு! – Athavan News

வடக்கு மாகாண மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் அலகினால் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நடுகை விழா இன்று (வியாழக்கிழமை) யாழ். மாவட்டத்தில் கல்லுண்டாய் பகுதியில் நடைபெற்றது.

இந்த மரம் நடுகை விழாவினை விவசாய திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் மற்றும் மீன்பிடி பிரிவு ஆகிய இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

குறித்த மரம் நடுகை நிகழ்வானது வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் நடைபெற்றிருந்த நிலையில் இதில் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள பணிப்பாளர், நீர்ப்பாசனப் பொறியியலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply