யாழில் மரநடுகை செயற்றிட்டம் இன்று ஆரம்பம்!(படங்கள் இணைப்பு)

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் அலகினால் ஏற்பாடு செய்யப்பட்ட மர நடுகை நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாண மாவட்டத்தில் கல்லுண்டாய் பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் உதவிச் செயலாளர் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கணக்காளர் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த மரநடுகை நிகழ்வானது டக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் நடைபெறுகின்ற நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் கல்லுண்டாய் பகுதியிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு இடதுகரை பகுதியிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏ9 மாங்குளம் வீதியின் இரு மருங்கிலும் வவுனியா மாவட்டத்தில் தாண்டிக் குளம் அரச விதை உற்பத்தி பண்ணைப் பகுதியிலும் மன்னார் மாவட்டத்தில் பாலாவி திருக்கேதீஸ்வரம் பகுதியிலும் ஏறக்குறைய 1500 மரங்கள் நாட்டப்படவுள்ளன.

இவற்றிற்கு மேலதிகமாக மாகாண விவசாய அமைச்சின் கீழ் உள்ள திணைக்கள வளாகங்களில் ஏறக்குறைய 600 பழ மரக்கன்றுகள் நாட்டுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


Leave a Reply