இங்கிரிய பிரதேச பௌத்த விவகார இணைப்பாளர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 40 மில்லிகிராம் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான தெரணமவிடம் போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பான தகவல்களை வெளிக்கொணர நீண்ட நேரம் விசாரணை நடத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
39 வயதான சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்
புலத்சிங்கள பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகரின் பணிப்புரையின் பேரில் உப பொலிஸ் பரிசோதகர் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.





