உக்ரைன் – ரஷ்யா யுத்தம்; இலங்கை விமானப்படைக்கு ஏற்பட்ட சிக்கல்!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான யுத்தம் காரணமாக ரஷ்ய தயாரிப்பான இலங்கை விமானப்படை பயன்படுத்தி வரும் எம்.ஐ.17 போக்குவரத்து உலங்குவானூர்திகளை பழுப்பார்ப்பதை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இடைநிறுத்தியுள்ளன.

அத்துடன் ரஷ்யா எம்.ஐ.17 உலங்குவானுர்திகளை நேட்டோ நாடுகள் பழுதுப்பார்ப்பதற்கு தடைகளை விதித்துள்ளது.

உலங்குவானூர்திகள் கடந்த 20 ஆண்டுகளாக நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடான லித்துவேனியாவில் பழுதுப்பார்க்கப்பட்டு வந்தன. 

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை காரணமாக இலங்கை விமானப்படை பயன்படுத்தி வரும் ரஷ்யாவின் எம்.ஐ. 17 உலங்குவானூர்திகள் பழுதுப்பார்ப்பது தடைப்பட்டுள்ளது.

இதனால், இலங்கை விமானப்படையினர் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது. 

Leave a Reply