மாணவர்களுக்கு தூரப் பார்வை குறைவடைந்துள்ளது – கண் வைத்திய நிபுணர்

கொரோனா தாக்கத்தின் பின்னரான சூழலில் மாணவர்களுக்கு தூர பார்வை குறைவடைந்துள்ளது என கண் வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி மலரவன் தெரிவித்தார்.

நிகழ்வு ஒன்றில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார் அவர் மேலும் உரையாற்றுகையில்,

கொரோனா தாக்கத்தின் பின்னரான சூழலில் மாணவர்களுக்கு தூர பார்வை குறைவடைந்துள்ளது.

இது உலகலாளரீதியில் உணரப்படரடுள்ளது. இதன் காரணமாக அடுத்த வருடத்தில் இருந்து பாடசாலைகளில் விளையாட்டு துறைகளுக்கு அதிக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

மாணவர்களுக்கான சித்திரப் போட்டி என்பது ஒரு சிறந்த விடயமாக சித்திரம் வரைதல் மூலம் மாணவருடைய எண்ணங்களையும் மனக்குமுறைகளையும் வெளிப்படுத்துகின்ற விடயமாக இது அமைந்துள்ளது.

சிறப்பான முயற்சியாகும். இவ்வாறான போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட வேண்டும் என்பது எனது கோரிக்கையாகும்.

எதிர்காலத்தில் இத்தகைய போட்டிகள் தேசிய ரீதியில் இடங்களை ஒன்றிணைத்ததாக நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு செயல்படுத்துகின்ற போது இனங்களுக்கு இடையிலான நல்லுறவை வளர்த்துக் கொள்ள முடியும் என்றார்.

Leave a Reply