வயலில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் – சோகத்தில் மூழ்கிய கிராமம்

மட்டக்களப்பு  களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டாபுரம் பகுதியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் காணாமல்போன இளைஞர்   சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 சுதாகரன் சூரியகுமார் என்னும் 20வயது இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக போன நிலையில் இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை குறித்த இளைஞனின் வீட்டிற்கு முன்பாகவுள்ள பாழடைந்த காணியிலிருந்த நீர்நிலையிலிருந்து குறித்த இளைஞனின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் விசேட தேவையுடைய இளைஞன் எனவும்,  இளைஞனுக்கு வலிப்பு நோயும் உள்ளதாகவும் குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply