துப்பாக்கி வெடித்ததில் சிறுவன் உயிரிழப்பு

வாயுத்  துப்பாக்கி ஒன்று தவறுதலாக வெடித்ததில் 4 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

கதிர்காமம் – தெடகம பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று கதிர்காமம் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

குறித்த வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழதுள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைக் கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply