வவுனியா றம்பைவெட்டி மீள்குடியேற்றக் கிராமத்தில் சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பின் அனுசரணையில் முன்பள்ளிக் கட்டிடம் ஒன்று இன்று (17) திறந்து வைக்கப்பட்டுள்ளது. 
வவுனியா றம்பைவெட்டி மீள்குடியேற்ற கிராமத்தில் 160 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இம்மக்களின் முன்கல்வி செயற்பாடுகளை மேற்கொண்டு தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக வடக்குகிழக்கு மலையகத்தில் 39 முன்பள்ளிகளை நிர்வகித்துவரும் சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பு காலஞ்சென்ற பட்டிமேடு சுப்பிரமணியம் சிதம்பரநாதன் செந்தூரனின் நினைவாக ,அவர்களின் நிதி அனுசரணையில் தம்பலகாமம் சிதம்பரநாதன் அறக்கட்டளையினால் மலரும் மொட்டுக்கள் முன்பள்ளி கட்டிடத் திறப்பு நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் அறக்கட்டளையின் பொருலாளர் சு. பரமேஸ்வரன், சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பின் தலைவர் சத்தியமூர்த்தி, வவுனியா தெற்கு கல்வி வலய முன்பள்ளி பிரதிப்பணிப்பாளர் வீ. பரஞ்சோதி தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமார், கிராம அபிவிருத்தி சங்கம், முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், கிராம மக்கள் எனப் பலரும் கவந்துகொண்டனர்.







