மஹிந்தவை தேடி அலையும் சீனத்தூதுவர் (படங்கள் இணைப்பு )

சீனத் தூதுவர்  Qi Zhenhong   இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

இதன் போது நாளை நவம்பர் 18ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பிரதமரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு சீன அரசாங்கத்தின் முன்கூட்டிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த சீன அரசாங்கத்திற்கும் சீன மக்களுக்கும் தூதுவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் பேணப்பட்டு வரும் வலுவான உறவுகளையும், நீண்டகால நட்புறவையும் மஹிந்த ராஜபக்ஷ ஞாபகப்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply