கொழும்பு,நவ 17
கரையோரப் பாதையில் பிற்பகலில் இயக்கப்படவிருந்த 6 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
அந்த வழித்தடத்தில் கொள்ளுப்பிட்டிக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையிலான பாலம் பழுதடைந்துள்ளதால் வெள்ளவத்தையில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலான ஒரு பாதையில் மாத்திரம் புகையிரத சேவைகள் இடம்பெறுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கரையோரப் பாதையில் இயங்கும் ஏனைய புகையிரதங்களும் தாமதமாக இடம்பெறலாம் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

