கோட்டாவுக்கு ஆப்புவைத்த ஹிருணிகா பிறேமச்சந்திர!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, பிரதிவாதியாக பெயர் குறிப்பிடுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  ஹிருணிகா பிரேமச்சந்திர கோரிக்கை​யொன்றை முன்வைத்துள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலேயே கோட்டாபய ராஜபக்ஷவை பிரதிவாதியாக பெயர் குறிப்பிடுமாறு ஹிருணிகா கோரியுள்ளார்.

 உயர்நீதிமன்றத்தில் குறித்த கோரிக்கையை ஹிருணிகா பிரேமச்சந்திர முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply