நெல்லியடியில் போதைப்பொருள் வைத்திருந்த 3 பேர் கைது

யாழ்ப்பாணம்,நவ 17

யாழ்ப்பாணம் நெல்லியடியில் போதைப்பொருளுடன் வடமராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த மூன்று பேர் இன்றைய தினம் மோப்ப நாய் உதவியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 80 கிராம் கஞ்சாவும் 83 மில்லி கிராம்
ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் மோப்பநாயுடன் நடத்திய தேடுதலின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கரணவாய், தும்பளை,குடவத்தை பகுதிகளைச் சேர்ந்த
20 மற்றும் 25 வயதுக்குட்பட்ட மூவரே கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply