இரண்டு மாத காலப்பகுதிக்குள் நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளும் சேவையாற்ற வேண்டும்-பஸ் கம்பனிகளின் இணையத்தின் தலைவர் தெரிவிப்பு!

அவ்வாறு சேவையாற்ற தவறினால் வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் தனியார் பேருந்துகள் அனைத்தும் பணி புறக்கணிப்பில் ஈடுபடுமென யாழ் மாவட்ட பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணையத்தின் தலைவர் பொ.கெங்காதரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பேருந்து உரிமையாளர்கள் வியாழக்கிழமை(17) ஆராய்ந்தனர்

இதன்போதே போது மேற்படி தீர்மானத்தினை எடுத்ததாக கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது தெரிவித்தார்.

Leave a Reply