தலைமன்னாரில் கைதுசெய்யப்பட்ட 15 இந்திய மீனவர்கள் விடுதலை!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டதாக கைதுசெய்யப்பட்ட, 15 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை) மன்னார் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட 14 வயது சிறுவன் உட்பட 15 பேரையும், தலா ஒரு வருட சிறைத்தண்டனையை 10 வருடங்களுக்கு ஒத்தி வைத்து விடுதலை செய்தார்.

மேலும், குறித்த 15 பேரும் மிகிரியாகம முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து அவர்கள் நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய உயர்ஸ்தானிக அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த 6 ஆம் திகதிஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில், 15 இந்திய மீனவர்களில் 14 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதோடு 14 வயது சிறுவனை, சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க மன்னார் நீதவான் கடந்த 7ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply