ஆணுறை ,மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட இராணுவச் சிப்பாய் – மாணவியை தகாத உறவுக்கு அழைப்பு

கிராபிக்ஸ் செய்யப்பட்ட  நிர்வாண புகைப்படத்தை காண்பித்து மாணவி ஒருவரை தகாத உறவுக்கு வற்புறுத்திய குற்றச்சாட்டில் இராணுவச் சிப்பாய் ஒருவர் நுவரெலிய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 கைதான இராணுவ சிப்பாய் கேகாலை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அச்சுறுத்தலுக்கு உள்ளான மாணவி பண்டாரவளையைச்  சேர்ந்தவர் என்றும், உயர்தரம் படிக்கிறார் என்றும்  தெரிவிக்கப்படுகிறது.

 சமூக வலைத்தளம் ஒன்றின்  ஊடாக குறித்த மாணவியை தொடர்பு கொண்டு, அந்த மாணவியின் புகைப்படத்தை எடிட் செய்து, நிர்வாண புகைப்படமாக  இணையத்தளங்களில் வெளியிடப்போவதாக அச்சுறுத்தி உள்ளார்.

 அவ்வாறு இணையத்தில் வெளியிடாமல் இருப்பதற்கு தன்னுடன் தகாத உறவுக்கு வருமாறு வற்புறுத்தியுள்ளார். இதனையடுத்து சம்பவம் தொடர்பில் நுவரெலிய குற்றத்  தடுப்பு பிரிவிற்கு மாணவி தகவல் வழங்கியதோடு, சந்தேகநபரான இராணுவச்  சிப்பாயை நுவரெலியா பகுதிக்கு வருமாறு பொலிஸாரின்  அறிவுறுத்தலுக்கு அமைய அழைத்துள்ளார்.

 இராணுவச்  சிப்பாய் நுவரெலியா நகருக்கு வந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து, ஆணுறை, பாலியல் ஊக்கி வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

 சம்பவம் தொடர்பில் குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி அஞ்சன பெத்தும்  குமார தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply