வெளிநாட்டு பிரஜை டயானாவை நாடு கடத்தவும் – முஜிபுர் எம்.பி.

வெளிநாட்டு பிரஜாவுரிமை பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவை உடனடியாக நாடு கடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கோரியுள்ளார்.

அவர் நாட்டில் தங்கியிருப்பதற்கான வதிவிட விசா காலம் ஜூலை 2015 முதல் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

போலி கடவுச்சீட்டை தயாரித்து வெளிநாட்டினராக நாட்டின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது அரசியலமைப்புக்கு முரணானது என பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது கருத்து தெரிவிக்கும் போதே ரஹ்மான் எம்.பி.இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply