டொலரின் பெறுமதியை குறைக்க வட்டி விகிதங்களைக் குறைக்கவும்! – வஜிர

வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டால் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலையை ரூ.360க்கும் கீழே கொண்டு வர முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று காலை பாராளுமன்றத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உள்ளூர் வர்த்தகங்களை காப்பாற்ற தற்போதைய பாரிய வட்டி விகிதங்கள் உடனடியாக குறைக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

நிதி அதிகாரங்களைக் கொண்ட பாராளுமன்றம் கட்டுப்படுத்தி வட்டி விகிதங்களுக்கு வரம்பை விதிக்க வேண்டும்.

வட்டி விகிதங்கள் தொடர்ந்தும் அதிகரித்தால் உள்ளூர் வர்த்தகங்கள் வீழ்ச்சியடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் வேலைகளை இழக்கத் தொடங்குவார்கள் மற்றும் நாட்டில் வறுமை நிலைகள் வேகமாக உயரும் என்பதால் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உள்ளூர் வர்த்தகங்கள் உதவியுள்ள அதேவேளை நாட்டின் வீழ்ச்சிக்கு ஒருசில நிறுவனங்கள் பங்களிப்பு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச அழுத்தங்களுக்கு அரசாங்கங்கள் அடிபணியக் கூடாது எனவும், இலங்கை மக்களின் நலன்களுக்காக தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும்.

எனவே நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றிக் கொள்வதற்கும் மக்களின் பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வுகளை வழங்குவதற்கும் ஜனாதிபதிக்கும் அவரது கொள்கைகளுக்கும் ஆதரவளிக்குமாறு பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து தரப்பினரிடமும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply