
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் 25 ஆவது ஆண்டு விழா எதிர்வரும் 20 ஆம் திகதி நீர்கொழும்பிலே மிகவும் எழுச்சியாக கொண்டாடப்பட இருக்கிற வேளையிலே தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் கடந்த 1997 ஆம் ஆண்டு உருவாகி அகில இலங்கை ரீதியாக உரிமை மறுக்கப்பட்ட மக்களுடைய நலன்களை கருத்திற்கொண்டு பல்வேறுபட்ட செயற்பாடுகளையும் ,போராட்டங்களையும் நடாத்தி வருகின்ற சூழ்நிலையிலே குறிப்பாக, 2002 ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கையின் கால கட்டத்திலே இந்த இயக்கம் முதன் முதலாக காலடி எடுத்து வைத்தது. இதன் ஆரம்பகட்ட நடவடிக்கையாக இந்திய இழுவைமடிக்கு எதிராக வட பகுதி மீனவர்களோடு கைகோர்த்து செயற்பட்டிருந்தது.
அந்தவகையில், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் .மாவட்ட இணைப்பாளரும் கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் தலைவருமாகிய இன்பம் இன்று (18.11.2022) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
எதிர்வரும் 20 ஆம் திகதி தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் 25 ஆவது ஆண்டு விழாவினையும் ,உலக மீனவ தினத்தினையும் கொண்டாடுவதற்கு 15 மாவட்டங்களில் இருக்கக்கூடிய மக்கள் அமைப்புக்கள்,மக்கள் பிரதிநிதிகள்,அனைவரும் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.
சிறு மீனவர்கள் சார்ந்து எதிர்காலத்தில் சிந்திக்க வேண்டி இருக்கிற சூழ்நிலையிலே வலி வடக்கு மக்கள் ,தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தோடு கைகோர்த்து நாங்கள எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய விதத்தில் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
மக்களின் வாழ்வாதாரங்களையும்,வளங்களையும்,மக்கள் சார்ந்த உரிமைகளையும் பாதுகாப்பதற்காக தொடர்ச்சியாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மிக காத்திரனமான பங்களிப்பினை செய்து வருகிறது.கரையோர பகுதி மீனவர்களை பல்வேறு பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து வருகிறார்கள்.கிளிநொச்சியை சேர்ந்த சிறு மீனவத் தொழிலார்கள் 50 நாள் போராட்டத்தினை நடாத்தியிருந்தார்கள் இதற்கு யாழ்.மாவடடத்தில் இருக்கக்கூடிய மீனவ சங்கங்கள் இன்னமும் ஒரு ஆக்கப்பூர்வமான பங்களிப்பினை செய்யாத ஒரு நிலையில் இருக்கின்றது. இவர்களின் போராட்டத்திற்கு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம் என கூறிக்கொள்கிறோம்.
மயிலிட்டி மீனவர்களின் பூர்வீக துறைமுகத்தினை அபிவிருத்தி என்கின்ற போர்வையில் அந்த மக்களிடமிருந்து பறித்துக்கொண்டமையால் அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தினை ஈட்டுவதற்காக பாரியளவு சிக்கல்களுக்குள் உட்பட்டு இருக்கிறார்கள்.ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியோடு பருத்தித்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்வதற்காக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருக்கிறார்கள்.இந்த துறைமுகமும் பறிபோக கூடிய சூழ்நிலை காணபப்டுகிறது.
எங்களுடைய ஆழ்கடல் மீனவக் கைத்தொழிலினை முடக்குவதற்காக சில நிறுவனங்கள் பொய்யான தகவல்களை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள் .10 வருடங்களுக்கு பிறகு இந்த கடலில் மீன் பிடிக்க இயலாது பண்ணை முறை கைத்தொழிலினை ஊக்குவிக்கும் முகமாக இவ்வாறாக மேற்கொண்டு வருகிறார்கள்.
கடற்பரப்புக்களை திட்டமிட்டு பலதேசியக் கம்பெனிகளால் மக்களை இதிலிருந்து அந்நியப்படுத்துகின்ற செயற்பாட்டினை மேற்கொண்டு வருகிறது.ஆகவே மக்களின் எதிர்காலத்தினையோ,கடல்,வாங்கலையோ பாதுகாப்பதற்கு அரசியல் தலைவர்களிடம் எந்தவொரு ஆக்கப்பூர்வ செயற்பாடுகளும் இல்லை
மீனவ மக்களுக்கும்,விவசாய மக்களுக்கும் ,ஏனைய தொழிலாள மக்களுக்கும் எதிர்காலம் சுவீட்சமாக அமைவதற்கு அனைத்து மீனவ மக்களும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க்கத்தோடு கைகோர்த்து பயணிக்க வேண்டும் என்று கூறிக்கொள்கிறேன்.





