யாழில் 7 வருடங்களுக்குப் பின்னர் ,இன்று இடம்பெற்ற முக்கிய நிகழ்வு – மகிழ்ச்சியில் பாடசாலை மாணவர்கள் (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணத்தில் சுமார் 7 வருடங்களுக்குப் பின்னர் ,புத்தக விற்பனைக் கண்காட்சி இன்று இடம்பெறுவதாக தேசிய கல்வி நிறுவனத்தின் ,அச்சிடல் வெளியீடுகள் துறையின் பணிப்பாளர்  எஸ்.எ.பிரபாகரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இன்று ஆரம்பமான புத்தக விற்பனைக் கண்காட்சியில் கலந்து கொண்டு,சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எமது நிறுவனத்தால் மாணவர்கள்,ஆசியர்கள்,மற்றும் ஏனைய கல்வி சார்ந்தவர்களுக்கான பதிப்புக்களை வெளியிட்டு வருகின்றோம்.மேல் மாகாணத்தில் இரண்டு இடங்களில் புத்தக விற்பனைக்கு கண்காட்சியை நடாத்தினோம்.

சுமார் 7 வருடங்களுக்குப் பின்னர் வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில்,மத்திய கல்லூரியில்  இன்று இந்த புத்தகக் கண்காட்சியை நடாத்துகின்றோம்.நாம் எதிர் பார்த்ததை விட மிகச் சிறப்பாக கண்காட்சி இன்று   நடைபெறுகிறது.

மாணவர்களின் சுய கற்றலை ஊக்கிவிக்கும் நோக்கில் இந்தக் கண்காட்சி  ஒழுங்கு படுத்தப்படுகிறது.இதற்கு வடக்கு மாகாண கல்வி அதிகாரிகள் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.

வாசிப்பு என்பது எமது சுவாசம்.மாணவர்கள் அதிகம் புத்தகங்களை வாசிக்க வேண்டும்.வீட்டிலிருந்து அதிக நேரம் கற்க வேண்டு.மேலும் 20 வீத விலைக்கழிவுடன் இந்தப் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

Leave a Reply