வவுனியா பிரதான கண்டி வீதி பேயாடிகூளாங்குளம் பகுதியில் சாரதிப் பயிற்சி வாகனம் ஒன்று வாகனப் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது எதிர்பாராமல் திடீரென்று வீதி அருகிலுள்ள வயல் தரைக்குள் நேற்று சென்று புதையுண்டுள்ளது எனினும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த எவருக்கும் எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை.

.சரியான முறையில் வாகன சாரதிகளை உருவாக்க வேண்டிய வாகன சாரதி பயிற்சியாளர்கள் தவறான முறையில் வாகனங்களை செலுத்தி பயிற்றுவிக்கும் போது இவ்வாறான சாரதி பயிற்சியாளர்களால் எவ்வாறு சமூகத்தில் சரியான வீதி ஒழுங்குகளை கடைப்பிடித்து வாகனம் செலுத்த கூடிய சாரதிகளை எவ்வாறு உருவாக்க முடியும். இவ்வாறு பொறுப்பற்று செயற்படும். வாகன சாரதி பயிற்றுவிப்பாளர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பயணிகள் தெரிவித்துள்ளனர்.





