யாழில் வட மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ் தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களின் ”கார்த்திகை வாசம் மலர் முற்றம் ”மலர்க் கண்காட்சி இடம்பெற்றிருந்தது
இக்கண்காட்சி நிகழ்வானது நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இன்று பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் தலைமையில் பிற்பகல் 3.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
குறித்த கண்காட்சி திறந்து வைக்கப்பட்டு வரவேற்பு நடனத்துடன் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன் பல வகையான,பல வண்ணங்களையுடைய பூ மரக்கன்றுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன,
யாழ்.பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் என். சண்முகலிங்கன் பிரதம விருந்தினராகவும் ,சமூக செயற்பாட்டாளர் இரேனியஸ் மற்றும் யாழ்.பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ச. ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டிருந்தனர்.










