விலை உயர்வால் பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களின் விற்பனை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மற்ற நாட்களில் 80 பக்க பயிற்சிப் புத்தகத்தை வாங்குபவர்கள் இப்போது இரண்டு 40 பக்க பயிற்சிப் புத்தகங்களை வாங்குகிறார்கள் எனத் தெரிவிக்கின்றனர்.
பேனா, பென்சில் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களின் விலை 200 முதல் 300 வீதம் வரை அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.
சில உபகரணங்களின் விலை 300 வீதத்துக்கு மேல் அதிகரித்திருப்பதையும் காணலாம். புத்தகங்கள் மற்றும் உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாக முன்பள்ளி துறையும் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக 30 வருட அனுபவமுள்ள முன்பள்ளி ஆசிரியர் ஒருவர் தெரிவிக்கிறார்.





