பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் செயற்பாட்டாளர் கலவெவ சிறிதம்ம தேரர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
அவர்களுக்கான தடுப்புக்காவல் உத்தரவு மேலும் நீடிக்கப்பட மாட்டாது என ஆணைக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் மீதான தடுப்புக்காவல் உத்தரவை நீடிப்பது அநீதியானது என குறிப்பிட்டு கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக மனித உரிமை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.





