யாழ் மீனவர்களுக்கு கடலில் காத்திருந்த அதிர்ச்சி (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாண கடல் பரப்பில் ,இந்திய மீனவர்களின்  றோளர் படகு மோதியதில்,படகு சேதமடைந்த நிலையில்,மீனவர் அதிஸ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

ஆனாலும் நான்கு இலட்சம்  ரூபா பெறுமதியான வலைகள் அறுத்து நாசம் செய்யப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 2 மணியளவில் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

  வல்வைட்டித்துறை கரையில் இருந்து 4 கடல் மைல் தூரத்தில் நூற்றுக் கணக்கான இத்திய இழுவைப் படகுகள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தது.

இதன் போதே வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி மீன்பிடி சங்கத்தைச் சேர்ந்த எஸ்.விஜயராஜா என்பருக்குச் சொந்தமான படகினை றோளர் படகு மோதி சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது என குறித்த மீனவர் தெரிவித்தார்.

இதன் போது மீனவர் கடலில் வீழ்ந்து  அதிஸ்டவசமாக உயிர் தப்பித்துள்ளார்.மீனவரது 4 இலட்சம் பெறுமதியான வலைகள் அறுத்து நாசம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த  நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும்  பிரதமர் மோடிக்கும் மீனவர்கள் உருக்கமான வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளனர்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள் எமது வாழ்வாதாரத்தை் மேலும் பாதிப்படைய செய்ய வேண்டாம்.

எம்மை உயிரோடு வாழவிடுங்கள் இந்திய தமிழ் உறவுகளே!

2021 ம் ஆண்டும் இதே காலத்தில் எனக்கு வலைகள் அறுக்கப்பட்டு நாசமாக்கப்பட்டது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே! எங்களுது வாழ்வாதாரத்தை பாதுகாக்க இந்திய மீனவர்களது இழுவைப் படகுகளின் அத்துமீறலை தடுத்து நிறுத்துங்கள் என்றனர்.

Leave a Reply