யூஸ் பைக்கற்றில் ஐஸ் போதைப்பொருள் – மூன்று பேர் கைது

ஐஸ் போதைப் பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடாவில் வைத்து  செய்யப்பட்டுள்ளனர்.

காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய கல்குடா பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ள சோதனை  நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரில் 33, 36 வயதுடைய இருவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், 38 வயதுடைய ஒருவர் மன்னாரைச் சேர்ந்தவராவார்.

சந்தேக நபர்களிடமிருந்து 22 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply