ஒரே பிரசவத்தில் மூன்று பெண்குழந்தைகளை பெற்ற மஸ்கெலியா தாய்

அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா புரன்வீக் ராணிதோட்டத்தை சேர்ந்த கிருஸ்ணகுமார் பாக்கியலெட்சுமி என்ற பெண் ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகளை  பிறசவித்துள்ளார். 

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் இந்த மூன்று பெண் குழந்தைகளையும் பிறசவித்துள்ளதாக  வைத்தியசாலை  அதிகாரி தெரிவித்துள்ளார் .

32 வயதுடைய கிருஸ்ணகுமார் பாக்கியலெட்சுமி என்ற  பெண்ணுக்கே இவ்வாறு 3 பெண் குழந்தைகள் கிடைத்துள்ளது. இதற்கு முன்பு பத்து மற்றும் எட்டு வயதினை கொண்ட இரண்டு ஆண்குழந்தைகள்  குறித்த பெண்ணுக்கு உள்ளமை குறிப்பிடதக்கது.

 குறித்த வீட்டில்  பெண்ணின் கணவர் (கிருஸ்ணகுமார்) மாத்திரம் தோட்ட தொழில் செய்து வருகின்ற நிலையில் தனது கணவரின் உழைப்பில் வரும் வருமானத்தை வைத்து கொண்டு தான் வாழ்ககை நடத்த வேண்டும் ஒரே தடவையில் மூன்று குழந்தைகளுக்கும் தாய்பால் ஊட்டுவது என்பது கஷ்டமான விடயம்.

இதுவரை காலமும் கூட வறுமையிலேயே வாடினோம். இனி இன்னும் கடினமாக இருக்கும் என பாக்கியலட்சுமி கூறியுள்ளார்.

Leave a Reply