யாழ். இளவாலை பகுதியில் 14 இலட்சம் பெறுமதியான நகை மற்றும் பணம் மீட்பு!

<!–

யாழ். இளவாலை பகுதியில் 14 இலட்சம் பெறுமதியான நகை மற்றும் பணம் மீட்பு! – Athavan News

யாழ். இளவாலை பகுதியில் உள்ள வீடுகளில் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவரிடமிருந்து 14 இலட்சம் பெறுமதியான நகை மற்றும் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் நேற்று (வெள்ளிக்கிழமை) மூன்று வீடுகளை உடைத்து திருடிய நிலையில் கைது செய்யப்பட்டார்.

இதற்கமைய இன்று (சனிக்கிழமை) மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Leave a Reply