முன்னாள் இந்தியப் பிரதமரின் பிறந்த தின விழாவில் பங்கேற்ற செந்தில் தொண்டமான்!

சமீபத்தில் இந்தியாவில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற முன்னாள் இந்தியப் பிரதமர்  நேருவின் பிறந்தநாள் விழாவில் இந்திய காங்கிரஸின் அழைப்பின் பேரில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் பங்கேற்று, நேருவின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில தமிழக காங்கிரஸ் தலைவர்  கே.எஸ்.அழகிரி, மூத்த காங்கிரஸ் தலைவர்களான திருநாவுக்கரசு,  தங்கபாலு மற்றும் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துக்கொண்டனர்.

மேலும் இந்தியா காங்கிரஸிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் இடையிலான பல தசாப்தக்கால நட்புறவுகள் குறித்து இதன் போது நினைவூட்டப்பட்டது.

Leave a Reply