இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கல் மற்றும் வேலைவாய்ப்பு சம்மந்தமான தெளிவூட்டல் நிகழ்வு ஒன்று இன்று காலை புத்தளம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு புத்தளம் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் வெளிநாட்டு செல்வோர்களுக்கான வேலைவாய்ப்புகள் கைத்தொழில் ஊக்குவிப்பு மற்றும் பல வேலைவாய்ப்புகள் சம்மனதாமன தெளிவூட்டல் நிகழ்வுகள் இடம்பெற்றது.
தொழில்வாய்ப்பை பெருவதற்கு புத்தளம் மாவட்டத்தில் பல பாகங்களிலும் இருந்து சுமார் 1000 ற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டதைக் காணக்கூடியதாக இருந்தது.










