மலையகத்தில் புலமைப்பரிசை தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கு

கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் அவர்களின் ஏற்பாட்டின் கீழ் வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு  கொட்டக்கலை ஸ்ரீ முத்து விநாயகர் கோவில் மண்டபத்தில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான புலமை பரிசில் இலவச கருத்தரங்கு ஒன்று  இன்றைய  தினம் (19) நடைபெற்றது.  

இதன் போது கொட்டகலை பிரதேச சபையின் அதிகார எல்லை பகுதியின்  பாடசாலைகளை  சேர்ந்த  300 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் குறிப்பிட்ட கருத்தரங்கில் பங்கு பெற்றிருந்தார்கள். 

இதன் போது நுவரெலியா கல்வி வளையத்தின் உப பணிப்பாளர் மற்றும் கொட்டக்கலை பிரதேச சபையின் உப தலைவர் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் ஆசிரியர்கள் அதிபர்கள்  பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply