ஓமானில் தொழில் வாய்ப்புக்காக பெண்களை அழைத்துச் சென்ற முகவருக்கு ஏற்பட்ட நிலை!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெண்களை தொழிலுக்கு அனுப்புவதாக கூறி ஓமான் நாட்டில் பெண்களை விற்பனை செய்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ள நபர் ஒருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய நபர் ஆவார்.

சந்தேக நபரால் ஓமானுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 19 பெண்களும் சந்தேக நபரால் நேற்று இரவு விமான மூலமாக அழைத்து வரப்பட்டபோது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். 

நாடு திரும்பிய 19 பெண்களும் இன்று நீர்கொழும்பு நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவரான சந்தேக நபர் நிரபராதி எனவும் தமக்கு சகல வழிகளிலும் உதவி புரிந்ததாகவும் எந்தவித தொந்தரவும் செய்யவில்லை எனவும்  அவர் குற்றம் அற்றவர் எனவும் தெரிவித்தனர்.

இதேவேளை சந்தேக நபர் நீர்கொழும்பு பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது, சந்தேக நபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

Leave a Reply