கொடகம,நவ 20
கொடகம பகுதயில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் இரண்டு பால் மா பொதிகளை திருடிய குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையத்து குறித்த சிறுவனை அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவரை, டிசம்பர் 12ஆம் திகதி வரை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
குறித்த சிறுவன் தனது தந்தையுடன் கொடகமவில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்குச் சென்றதாகவும், அங்கிருந்து இரண்டு பால் மா பொதிகளை களவாடிச் சென்றதாகவும் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்திருந்தனர்.
குறித்த சிறுவனை வர்த்தக நிலையத்துக்கு அழைத்துச் சென்று பால் மா பொதியை களவாட வைத்தது அவரது தந்தையே என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.





