மாட்டுக்கு புல் அறுக்கச் சென்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

ஹப்புத்தளை கஹாகொல்லை  தோட்டத்தைச் சேர்ந்த  நபர்,  மின்சார கம்பமொன்றில் ஏறியபோது, குறித்த நபர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயரிழந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பசுவிற்கு புல் அறுக்கச் சென்ற தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்து விட்டதாக தோட்ட மக்களால் ஹப்புத்தளை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஹப்புத்தளைப் பொலிஸார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, சடலத்தை  மீட்டதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply