வஜிரவை பற்றி நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்: திஸ்ஸ அத்தநாயக்க

கொழும்பு,நவ 20

வஜிர அபேவர்தன யார் என்பது முழு நாடும் அறிந்திருப்பதாகவும், எனவே வஜிர அபேவர்தனவின் கருத்துக்களை கவனத்தில் எடுத்துக்கொள்ள தேவையில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள் பலர் தம்முடன் இரவோடு இரவாக கலந்துரையாடி வருவதாக வஜிர அபேவர்தன தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a Reply