கொட்டடியில் 500 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் மூவர் கைது!

யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்  அத்தியட்சகரின் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட புலனாய்வு  பிரிவுக்கு கிடைக்க ரகசிய தகவலை அடுத்து கொட்டடி பகுதியில் உள்ள வீடு ஒன்றினை சோதனை யிட்டபோது 500 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளுடன்

கொட்டடிப்பகுதியைச் சேர்ந்தவர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 

கைது செய்யப்பட்டவர்களுக்குஏற்கனவே  போதைப் பொருள் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

அத்தோடு கைது செய்யப்பட்டவர்களுக்கு மாதகல் பகுதியிலிருந்து போதைப்பொருள்  கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர் கைது செய்யப்பட்ட மூவரும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதோடு விசாரணைகளின் பின்  நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளனர்.

Leave a Reply